fbpx

உங்கள் ஸ்மார்ட் போனில் இந்த App இருக்கிறதா?… உடனே டெலிட் செய்யுங்கள்!… கண்டுபிடிக்கும் முறை இதோ?

நமது ஸ்மார்ட் போன்களில் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் சில செயலிகள் மூலம் பல மோசடிகளை தடுக்கும் வகையில், போனில் மறைந்திருக்கும் அப்ளிகேஷன்களை எப்படி டெலிட் செய்வது உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஓய்வு நேரங்கள் மட்டும் இன்றி பயணங்களின் போது ஏன்.. நடந்து சென்றால் கூட பலரும் குனிந்த தலை நிமிராமல் செல்போன்களையோ பார்த்துக்கொண்டு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. போன் பேசுவது மட்டும் இன்றி உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு இணையம் மூலமாக அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன்களில் பார்த்துவிடலாம் என்பதால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நேரமும் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகிறது.

இந்தநிலையில், எந்த அளவுக்கு ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதோ அதே அளவுக்கு அதில் மோசடிகளும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், நமது ஸ்மார்ட் போன்களில் சில சமயங்களில் சில செயலிகள் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டு, ஹிட்டன் செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் பண மோசடி, தனிநபர் விவரங்கள் என பல மோசடிகள் நடைபெறுகின்றன.

நமது போனில் ஹிட்டன் செய்யப்பட்டிருக்கும் செயலிகளை கண்டுபிடிக்கும் முறை இதோ. முதலில் நமது போனில் செட்டிங் பகுதிக்கு சென்று, அதில், ஆப்ஸ் அண்ட் நோட்டிபிகேஷன் பகுதியில் பயன்படுத்தப்படும் செயலிகளின் முழுமையான பட்டியல் இருக்கும். இப்போது, See All Apps என்பதை தேர்வு செய்யவும். இங்கே நீங்கள் Installed Apps, Disabled Apps, Hidden Apps என அனைத்து விருப்பங்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும். இப்போது, Disable apps என்பதற்குள் செல்லவும். இதில், உங்கள் மொபைலில் எந்தெந்த ஆப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். நீங்கள் Installed செய்யப்படாத செயலிகள் ஏதாவது இருந்தால், அதை உடனே டெலிட் செய்யவும்.

உங்கள் மொபைல் செட்டிங்ஸ் சென்று ஆப்ஸ் -க்குள் செல்லவும். இங்கே Special App Access கிடைக்கும். அதை கிளிக் செய்யவும். பின்னர், உங்களுக்கு All Files Access கிடைக்கும். அதை கிளிக் செய்யவும். இப்போது, உங்கள் தொலைபேசியில் இருக்கும் செயலிகளை பற்றிய தகவலைப் பெறுவீர்கள். இங்கே நீங்கள் மறைக்கப்பட்ட செயலிகளை தெளிவாக காணலாம்.

Kokila

Next Post

மெகா வேலைவாய்ப்பு.. மொத்தம் 46,435 காலி பணியிடங்கள்.. SSC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

Sun Feb 12 , 2023
கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் ( Staff Selection Commission – SSC) வெளியிட்டுள்ளது. SSC கான்ஸ்டபிள் (GD- General Duty) தேர்வு 2022க்கான தற்காலிக காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பட்டியலைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 46,435 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force -BSF), மத்திய […]

You May Like