fbpx

உங்கள் நகங்களில் இந்த அறிகுறி இருக்கா..? புற்றுநோயாக கூட இருக்கலாம்..!! மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

உலகில் எண்ணற்ற மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது இதய நோய் மற்றும் புற்றுநோய் தான் என்று சொல்லப்படுகிறது. என்ன தான் மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இந்த இரண்டு நோய்களால் ஏராளமானோர் இறந்து வருகின்றனர். இதற்கு காரணம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து போதுமான சிகிச்சையை எடுக்காமல் இருப்பது தான்.

தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் உடலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் சில கொடிய நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும் இந்த அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், பலர் அதைப் புறக்கணிக்கின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவரான Dr Lindsey Zubritsky மிகவும் அரிதான ஆனால் கொடிய தோல் புற்றுநோய் குறித்து சமூக வலைதளத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில், தோல் புற்றுநோயின் மிகவும் அரிதான மற்றும் நிறைய பேர் புறக்கணிக்கும் அறிகுறி ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, விரல் நகங்களில் கருமையான கோடு தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது ஒரு வகையான சரும புற்றுநோயான சப்யூங்குவல் மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார். இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே அதை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Read More : முட்டை ஓடுகளில் மருத்துவ குணம்..!! உடைந்துபோன எலும்பை இனி ஈசியா ஒட்ட வைக்கலாம்..!! அசத்திய சேலம் ஆராய்ச்சியாளர்கள்..!!

English Summary

It is said that heart disease and cancer are the leading causes of death in the world.

Chella

Next Post

கல்லீரலை காலி செய்கிறதா காஃபி..? லிமிட்டை தாண்டினால் என்ன ஆகும்..? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?

Sat Feb 22 , 2025
Caffeine is the secret behind why so many people keep coffee as their favorite drink. It acts directly on the brain to increase alertness and reduce fatigue.

You May Like