fbpx

தமிழ்நாட்டில் கோஸ்ட் டவுன் கேள்விப்பட்டு இருக்கீங்களா.? இந்த பாரம்பரியமிக்க இடத்துக்கு சுற்றுலா போகலாமே.!

தமிழகத்தில் இருக்கக்கூடிய அழகிய கடற்கரைகளில் முக்கியமான ஒன்று தனுஷ்கோடி. இது தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கடற்கரை இலங்கையின் தலைமன்னாருக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள ஒன்றாகும்.

இந்தக் கடற்கரையின் ஒரு புறம் மன்னார் வளைகுடாவும் மற்றொருபுறம் வங்காள விரிகுடாவும் சூழ்ந்து இருக்கிறது. ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த இடத்தை எளிதாக வந்தடையலாம். மேலும் பெரிய பொருட்செல இல்லாமல் பட்ஜெட்டில் பார்க்கக் கூடிய ஒரு அற்புதமான இடம் இதுவாகும்.

மேலும் 1964ஆம் ஆண்டு புயலில் பாதிக்கப்பட்ட கோஸ்ட் டவுன் என்று அழைக்கப்படும் பகுதியும் தனுஷ்கோடியில் உள்ளது. இந்த கோஸ்ட் டவுனுக்கு சுற்றுலா செல்வதற்கு மாலை 5 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. தனுஷ்கோடியில் இருந்து தனியார் வேன்கள் கோஸ் டவுனுக்கு அழைத்துச் செல்லும்.

புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இடிந்த கட்டிடங்கள் என பிரதான சின்னமாக இந்த பகுதி விளங்கி வருகிறது. இது போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்வதன் மூலம் இந்த இடங்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு அவற்றின் வரலாற்று பின்னணிகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

Kathir

Next Post

இல்லத்தரசிகளே!… செலவும் கம்மி!… பணத்தையும் சேமிக்கலாம்!… வீட்டு செலவுகளை சமாளிக்க டிப்ஸ்!

Thu Nov 16 , 2023
இல்லத்தரசிகள் மட்டுமன்றி, வீட்டு செலவுகளை பார்த்துக்கொள்ளும் குடும்ப தலைவர்களும் பணத்தை சேமிக்க பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள், திருமணம் ஆகாமல் தனியாக வசிப்பவர்கள், சொந்த ஊரை விட்டு வெளி ஊர்களுக்கு சென்று அங்கு தங்கி வேலை பார்ப்வர்கள் என அனைவருமே வீட்டு செலவுகள் குறித்தும் அதை கையாளும் முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இங்கு வீட்டு செலவுகளை சமாளிக்க சில ஈசி […]

You May Like