fbpx

மினி கொடைக்கானலா.? வாங்க இது எங்க இருக்குன்னு பாக்கலாம்.!

சுற்றுலா செல்வது என்பது மக்கள் அனைவருக்கும் இனிமையான ஒரு தருணம். தங்களது கவலைகளையும் கஷ்டங்களையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்கவும் மனதை அமைதி படுத்தவும் மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். இன்றைய பதிவில் குறைந்த செலவில் மனதிற்கு அமைதியை தரும் இயற்கை எழில் நிறைந்த ஒரு சுற்றுலாத் தலத்தை பற்றி பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானல் மிகவும் பிரபலமான ஒன்று. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் இந்த எழில் கொஞ்சும் சுற்றுலா தளமும் அமைந்திருக்கிறது. அந்த இடத்தின் பெயர் சிறுமலை. இது திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பிரதேசம் மினி கொடைக்கானல் என அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

சுற்றிலும் மரங்கள் தாவரங்கள் அரிய பறவைகள் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை பிரதேசம் பட்ஜெட் சுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த இடம் ஆகும். இங்கு இருக்கக்கூடிய வேளாங்கன்னி தேவாலயம், பார்வை கோபுரம், கான்டிஜ் எஸ்டேட், சஞ்சீவினி மலை, வெள்ளிமலை முருகன் கோவில் ஆகியவை மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும். இங்கு ரசிப்பதற்கு என்று இயற்கையான பல இடங்கள் இருந்தாலும் பொழுது போக்கிறேனா இருக்கும் இடங்கள் குறைவு தான்.

சிறுமலைக்கு சுற்றுலா செல்வதற்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும் தனி வாகனங்களில் செல்லும்போது இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே செல்ல முடியும். இங்கு இருக்கக்கூடிய மீன் முட்டி பாறையில் ஆதிவாசிகளின் குகை ஓவியங்களும் இடம் பெற்று இருப்பது தனி சிறப்பு. அடுத்த முறை சுற்றுலா செல்வதென்றால் சிறுமலைக்கு சுற்றுலா சென்று வாருங்கள் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

Kathir

Next Post

அப்பாவின் சொத்தில் திருமணமான பெண்களுக்கு பங்கு இல்லை?… உண்மை என்ன?

Sun Nov 19 , 2023
அப்பாவின் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இருக்கிறதா? வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. அதிலும், அப்பாவுக்கு சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, அதை உயிலாக எழுதி வைக்கவில்லை என்னும் பட்சத்தில், பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா? திருமணமான பெண்களுக்கு உரிமை இல்லையா என்பதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். அப்பா […]

You May Like