fbpx

பச்சை பாலை ஃபிரிட்ஜில் வைக்கிறீங்களா..? இந்த பிரச்சனை எல்லாம் வருமாம்..!! நிபுணர்கள் எச்சரிக்கை..

நம்மில் பெரும்பாலோர் பாலை வாங்கி வந்தவுடன் ஃபிரிட்ஜில் வைப்போம். ஆனால் இது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பச்சைப் பாலை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்தால் என்ன ஆகும்? பொதுவாக பால் கறக்கும் விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டால், அந்த வைரஸ் பாலிலும் சேரும். பாலை காய்ச்சாமல் நேரடியாக ஃப்ரிட்ஜில் வைத்தால் வைரஸ் உயிர்வாழும் என்கின்றனர் நிபுணர்கள். பாலில் உள்ள இந்த வைரஸால் குளிர்காலத்தில் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனால்தான் பாலை காய்ச்சிய பின்னரே குளிர்சாதன பெட்டியில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. 

பால் சேமிப்பது எப்படி? சேமித்து வைப்பதற்கு முன் பாலை காய்ச்ச வேண்டும் என்பார்கள். இவ்வாறு செய்வதால் பாலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அழிக்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் பச்சைப் பாலை நேரடியாகக் குடிக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. 

ஆனால் சிலர் பச்சை பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் இதில் உண்மை இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பச்சைப் பால் குடிப்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பாலை காய்ச்சினால் மட்டுமே வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 

Read more ; தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! 18, 19ஆம் தேதிகளில் சம்பவம் இருக்கு..!!

English Summary

Do you keep raw milk in the fridge? Do you know what happens?

Next Post

மாணவி பாலியல் துன்புறுத்தப்பட்டது எப்படி..? சென்னை ஐஐடி பரபரப்பு விளக்கம்..!! மாணவ - மாணவிகளுக்கும் முக்கிய அறிவுரை..!!

Wed Jan 15 , 2025
The accused has no connection with IIT. There are CCTV cameras in the IIT campus.

You May Like