fbpx

த்ரிஷா இதுவரை குவித்து வைத்திருக்கும் பணம் எத்தனை கோடி தெரியுமா..? விரைவில் அந்த இலக்கை தொட போகுது..!!

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகி இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர் த்ரிஷா. கடந்த 1999இல் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா. பின்னர், கடந்த 2000இல் ரிலீஸான சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரியை தமிழ் ரசிகர்கள் எப்போதுமே ரசிப்பார்கள். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு விஜய்-த்ரிஷா ஜோடியாக லியோ படத்தில் நடித்திருந்தனர். இவர்களின் கம்பேக் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இவர்களின் கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பியது. அதுவும் படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஆறுதல் சொல்லி லிப்கிஸ் அடிக்கும் காட்சி செம வைரலானது.

இந்நிலையில், த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்ப்போம். அதன்படி, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்க 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நடிகை த்ரிஷா, லியோ படத்திற்காக 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாதம் 60 லட்சம் ரூபாயும் ஆண்டுக்கு 9 கோடி ரூபாய் வரை நடிகை த்ரிஷா விளம்பரங்கள், சினிமா படங்கள் மூலம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை த்ரிஷாவுக்கு சென்னையில் 6 கோடி மதிப்பிலான சொந்த வீடு ஒன்று உள்ளது. ஆந்திராவிலும் த்ரிஷாவுக்கு ஒரு வீடு உள்ளது. மேலும், பல ரியல் எஸ்டேட் சொத்துக்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இவரிடம் 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார் உள்ளது.

இந்நிலையில் சமந்தா, நயன்தாரா அளவுக்கு நடிகை த்ரிஷா சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் அதிக பட்சமாக 70 முதல் 80 கோடி ரூபாய் சொத்து த்ரிஷாவின் பெயரில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கூடிய விரைவில் 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு அதிபதியாக வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

உயிரினங்களை உயிரோடு உறைய வைத்த அண்டார்டிகா..!! பனிப் பாறைகளுக்கு அடியில் மறைந்திருக்கும் உலகம்..!!

Fri Oct 27 , 2023
இப்போது பனியால் சூழப்பட்டு, மனிதர்களே வாழ முடியாத நிலையில் இருக்கும் அண்டார்டிகாவில், ஒரு காலத்தில் தாவரங்களும், உயிரினங்களும் வாழ்ந்துள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதற்கான சான்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் தாவரங்கள் இருந்துள்ளன. அங்கு விலங்கினங்கள் வாழ்ந்துள்ளன. காலப் போக்கில் பனி சூழ்ந்ததால் அவை அப்படியே உறைந்து போய்விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் இப்போது அண்டார்டிகாவின் பனிக்கட்டி அடுக்கின் ஆழத்தில் அமைந்துள்ள […]

You May Like