fbpx

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தைப் போல இந்த படம் இல்லை என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கெடுத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் மட்டுமே ரூ. 545 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களை இயக்க வருவதற்கு முன்னர் ஒரு வங்கயில் மேனேஜராக பணியாற்றினார். படங்களை இயக்க தொடங்கிய பின்புதான் இவரது வாழ்க்கையே மாறியுள்ளது. அதன்படி, இவருக்கு சுமார் 35.6 கோடி சொத்து மதிப்பு இருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, லியோ படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்காக இவர் 70 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

'அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண அவுங்க வீட்டுக்கே போயிருவேன்’..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!

Wed Nov 1 , 2023
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பாப்ரி கோஷ். பெங்காளி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான இவர், நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, வானத்தை போல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பாப்ரி கோஷ் இடம் தொகுப்பாளர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், […]

You May Like