fbpx

விமர்சனத்தையும் தாண்டி ‘லியோ’ திரைப்படம் இதுவரை வசூலித்தது எத்தனை கோடிகள் தெரியுமா..?

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் லியோ. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் லியோவின் ஃபீவர் கொஞ்சம் கூட குறையாமல் அந்த ஏரியாக்களில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை உருவாக்கி உள்ளதாகவும் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் 179 கோடி ரூபாய் வசூல் செய்து 200 கோடி வசூலை நோக்கி லியோ நகர்ந்து வருவதாக கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தின் விமர்சனங்களை கடந்து அதன் வசூல் குவிந்து வருவது நடிகர் விஜய்யின் நடிப்பை பார்க்கத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களில் 305 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்த நிலையில், உலகம் முழுவதும் 4-வது நாளில் 390 முதல் 395 கோடி ரூபாய் வசூலை லியோ இதுவரை பெற்றிருப்பதால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையுடன் சேர்த்து 500 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம், பின்னர் வசூல் கணக்கை இன்னும் வெளியிடவில்லை.

Chella

Next Post

சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டு..!! தயாராக இருக்கும் ஹமாஸ் அமைப்பு..!! இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Mon Oct 23 , 2023
சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காஸா மீது தொடர்ந்து 17-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். காசாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்துள்ளது. இதையடுத்து, வடக்கு காசாவில் இருந்து பொதுமக்களை தெற்கு காசாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் […]

You May Like