ரிலையன்ஸ் நிறுவனரும் ஆசியாவின் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானி வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். அம்பானி குடும்பத்தினர் விலை உயர்ந்த கார்கள், ஆடைகள், ஆபரணங்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் நீதா அம்பானி ஒப்பனை கலைஞரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
பிரபல மேக்கப் கலைஞர் மிக்கி காண்டிராக்டர் தான், திருமண விழா மற்றும் பார்ட்டி என அனைத்து நிகழ்வுகளிலும் நீதா அம்பானியை அழகாக காட்டுகிறார். இந்தியாவின் மிகவும் திறமையான ஒப்பனை கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக்கி, பல பிரபலங்களுக்கு ஒப்பனை செய்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு லட்சங்களில் அவர் சம்பளம் வாங்குகிறார்.
மிக்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொழுதுபோக்கு மற்றும் பேஷன் துறையில் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறார். பல பிரபல பாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் ஒப்பனை கலைஞராக பணியாற்றியுள்ளார். மிக்கியின் வாடிக்கையாளர் பட்டியலில் நீதா அம்பானியும் உள்ளார். மிக்கி தனது ஒப்பனைத் திறமையால், நிதா அம்பானி கலந்து கொள்ளும் எந்த நிகழ்விலும் தனித்துவமாகத் தோன்றுவதை உறுதிசெய்கிறார். நீதாவின் மகள் இஷா மற்றும் மருமகள் ஷ்லோகா மேத்தா ஆகியோருக்கும் விக்கி தான் ஒப்பனை செய்கிறார்.
பிரபல மேக்கப் கலைஞர் மிக்கியின் சம்பளமும் மிக அதிகம். ஒருவருக்கு மேக்கப் செய்ய ஒரு நாளைக்கு 7.5 லட்சம் பெருகிறாராம். மும்பையில் ஒப்பனை கலைஞர் ஒருவர் வாங்கும் அதிபட்ச கட்டணம் இதுவாகும். பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், கரீனா கபூர் கான், ஐஸ்வர்யா ராய் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு விக்கி ஒப்பனை செய்துள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒப்பனை கலைஞர்களில் இவரும் ஒருவர். நாட்டில் உள்ள பல ஐஏஎஸ் அதிகாரிகளை விட விக்கியின் சம்பளம் பல மடங்கு அதிகம்.