fbpx

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிரதீப் ஆண்டனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இரண்டு வீடு என புதிய கான்செப்டுடன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. ஒருமாதம் கடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவர் வெளியேற்றப்பட்டது குறித்து மக்கள் கலவையான கமெண்ட்ஸ் தான் கொடுத்து வருகின்றனர். நிறைய பேர் அவருக்கு சாதகமாக பேசி வருகின்றனர். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ள பிரதீப் ஒரு வாரத்திற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இனி பிக் போஸ் வீட்டில் இருக்கும் ஏனைய போட்டியாளர்களின் பங்கு எவ்வாறு இருக்கிறது என தொடர்ந்து பார்ப்போம்.

Chella

Next Post

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!… மிக மோசமான காற்று மாசு!… கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Mon Nov 6 , 2023
டெல்லியில் நிலவிவரும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக வரும் 10 ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி கூறுகையில், காற்று மாசின் நிலைமையைக் கருத்தில் கொண்டு 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறலாம் என்றும் அவர் கூறினார். டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபாடு சுகாதார அடிப்படையில் மிக […]

You May Like