fbpx

’கோட்’ படத்தில் நடிக்க சினேகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? பிரசாந்துக்கு இத்தனை கோடியா..?

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கோட். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழு உற்சாகத்தில் இருந்து வருகிறது. இது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ராஜதுரை படத்தின் கதை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இப்படத்தை பொறுத்தவரை அப்பா, மகன் என 2 வேடங்களில் விஜய் நடித்திருந்தாலும் மகன் நடிப்பில், விஜய் வேற லெவலில் அதகளம் செய்திருக்கிறார் என்று சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த் நண்பராக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் 1990களில் டாப் ஸ்டாராக வலம் வந்த நடிகர் பிரசாந்த், இடையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் தனது 2வது இன்னிங்ஸை துவங்கி விட்டார். அதேபோல், தி கோட் படத்தில் சினேகாவும் முக்கிய கேரக்டரில், விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அப்பா, மகன் என்ற 2 வேடங்களில் விஜய் நடித்துள்ள நிலையில் இதில் அப்பா விஜய்க்கு சினேகா மனைவியாக நடித்திருக்கிறார். அவரது அழகும், நடிப்பும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கோட் படத்தை தயாரித்துள்ளது. இதில் நடிகர் விஜய் சம்பளம் ரூ. 200 கோடி என்ற நிலையில், மீதி ரூ. 200 கோடி செலவில் மற்ற நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், படம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தி கோட் படத்தில் நடித்ததற்காக நடிகர் பிரசாந்துக்கு ரூ. 5 கோடியும், நடிகை சினேகாவுக்கு ரூ. 75 லட்சமும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More : 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் 50% மானியம்..!! விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Actor Prashanth was paid Rs. 5 crore and actress Sneha Rs. 75 lakhs is said to have been paid.

Chella

Next Post

நடுரோட்டில் பலாத்காரம்.. கதறி அழுத பெண்.. கண்டுக்காமல் வீடியோ எடுத்த மக்கள்..!! பகீர் சம்பவம் நடந்தது எங்கே?

Fri Sep 6 , 2024
Rape On Road In MP's Ujjain: Another Day, Another Woman As Nation Boils Over Kolkata Case

You May Like