மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா மருந்தின் விலை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணியருக்கு, கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த 23ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த ஒப்புதல் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே வழங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும், மருத்துவமனை கட்டணமும் வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளனர். எனவே, அனைத்து கட்டணங்களையும் சேர்ந்து ரூ.1,000 வரை செலவாகும் என கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 325ஆக விலை நிர்ணயம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளலாம். மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஜனவரி 26ஆம் தேதிக்குள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.