fbpx

‘டாப் குக்கு டூப் குக்கு’ நடிகர் வடிவேலுக்கு ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் வைகைபுயல் வடிவேலு கலந்து கொள்ள உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்றே சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிவாராக வெங்கடேஷ் பட் உள்ள நிலையில், தற்போது இவருடன் நடிகர் வடிவேலும் கலந்துகொள்ள உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோ வைரலானது. இந்த நிகழ்ச்சி கடந்த மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் டாப் குக்காக பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பெப்சி விஜயன், சாய் தீனா, சோனியா அகர்வால், சுஜாதா சிவகுமார், சிங்கம்புலி, ஐஸ்வர்யா தத்தா, ஷாலிநிவாஸ், நரேந்திர பிரசாத், சைத்ரா ரெட்டி ஆகிய 9 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மறுபுறம் டூப் குக்காக தீபா, அதிர்ச்சி அருண், பாரத், தீனா, மோனிஷா, ஜிபி முத்து, விஜய், முகுந்த், சௌந்தர்யா, கதிர் ஆகிய 9 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூன்று அணியாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வழி நடத்துவதற்காக மூன்று செஃப் அறிமுகமாகி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லும் போட்டியாளருக்கு 20 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வைகைபுயல் வடிவேலும் பங்கேற்று உள்ளார். மேலும் இதில் ஒரு எபிசோடுக்கு அவர் ரூ. 1 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரு எபிசோடுக்கே இவ்வளவு சம்பளமா என்று ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

Read More: ‘டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்’ ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்!

Rupa

Next Post

ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணிக்கலாம்..!! சூப்பர் அம்சங்களுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!!

Wed May 22 , 2024
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக நிறுவனங்கள் பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது அந்த வரிசையில், பெங்களூருவைச் சேர்ந்த மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் தனது புதிய மின்சார ஸ்கூட்டரான ஏதர் ரிஸ்ட்டாவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. TVS iQube, Ola S1 மற்றும் Hero Vida V1 ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த மின்சார ஸ்கூட்டர் […]

You May Like