fbpx

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி ஐசு-வ நியாபகம் இருக்கா?இப்போ ஆளே மாறிட்டாங்க!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில், சூர்யா ஜோதிகாவின் ரீல் மகளாக நடித்த நடிகை ஸ்ரியா சர்மாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா ஜோதிகா. படங்களில் ரீல் தம்பதிகளாக இருந்த இவர்கள் ஒருவர் ஒருவரை காதலித்து ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா ஜோதிகாவின் அசத்தலான காம்போவில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் சில்லுனு ஒரு காதல். 2006 ஆம் வெளியான இந்த படம் காதல் கதையை மையமாக கொண்டது. இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்த சிறுமியின் லேட்டஸ் புகைப்படம் ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் 2005ல் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஜெய் சிரஞ்சீவா என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரியா சர்மா.

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பாடலிலும் ஹிட் கொடுத்த இப்படத்தில் குட்டி ஐசுவாக ஸ்ரியா சர்மா நடித்திருப்பார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வது உண்டு.

அந்த வகையில் அவரது ரீசென்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகா மகளாக நடித்த குழந்தையா இது..  இவ்வளவு பெரிய பொண்ணா ஆகிட்டாங்க! என்ன அழகு ஹீரோயின் போல இருக்காங்களே.. என்று போட்டோவை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Read more ; நுரையீரல் பிரச்சனையால் அவதி..!! நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்..!!

English Summary

Do you know how this girl who starred in Chillunu Oru Kadhal is doing now?

Next Post

'சென்னையில் 14 ஏக்கரில் பிரம்மாண்ட அரண்மனை!' இப்போதும் வாழும் மன்னர் குடும்பம்!! பலருக்கு தெரியாத தகவல்!!

Wed Jun 19 , 2024
A huge palace in 14 acres in Chennai! The royal family is still alive.

You May Like