விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொரோனா தொற்றினாலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளம் மகன்/மகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15700/- (15,700-50,000)
வயது வரம்பு : குறைந்த பட்சம் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 வயது மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 34 வயது மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஜனவரி 10ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், சாத்தூர்” என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.