fbpx

புங்க மரத்தின் அருமை தெரியுமா உங்களுக்கு!… மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு இதுதான்!… டிரை பண்ணுங்க!

சுத்தமான காற்றை கொடுக்க கூடிய புங்க மரத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நல்ல சுத்தமான காற்றை கொடுக்கும் புங்க மரம், வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது.புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது. புங்க விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பொடித்து வைத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி குடிக்கத்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது. இது ஆஸ்துமா, நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம். புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சொரியாசிஸ்சுக்கான மருந்து தயாரிக்கலாம்.

புங்க எண்ணெய், பரங்கி பட்டை சூரணம் ஆகியவற்றை தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பூசினால் சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். புங்கங் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.புங்க இலையை பயன்படுத்தி உடல், தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க இலையை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டிய பின், துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவவும். தலையில் பொடுகினால் அரிப்பு இருந்தால் இதை தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும். புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது.

அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது. புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது. புங்க எண்ணெய்யை பயன்படுத்தி மூட்டு வலி, கால் வலி, கீல்வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் வலி சரியாகும். புங்க எண்ணெய், வாத நீரால் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். மூட்டு வலிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சக சளி, இருமல் குறைகிறது.

Kokila

Next Post

வேகமாக பரவும் XBB1.16 மாறுபாடு.. அடுத்த 4 வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

Wed Apr 12 , 2023
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரானின் புதிய XBB1.16 மாறுபாடு மக்களின் நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க முடியும் என்றும், வரவிருக்கும் 4 வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த குழந்தை மருத்துவர், டாக்டர் டிரென் குப்தா இதுகுறித்து பேசிய போது, “குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு XBB1.16 மாறுபாடு முதன்மைக் […]
கொரோனா

You May Like