நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் என்று கூறி இணையதளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அண்மையில் 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது திரை பிரபலங்கள், சீரியல் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரின் மகனோ-மகளோ, குழந்தை நட்சத்திரமாக இருப்பின் அவருடையதோ, மதிப்பெண்கள் எவ்வளவு என தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அதிகம் ஆர்வம் அதிகரிக்கும். அந்த வகையில் சிலரது மதிப்பெண்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், அண்மையில் வெளியான 12ஆம் வகுப்பு தேர்வில் நகைச்சுவை நடிகர் கிங்காங்கின் மகள் 404 என கூறப்படுகிறது. அது போல் சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா 600-க்கு 581 மதிப்பெண்களை பெற்றதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் மகன் யாத்ரா 600-569 மதிப்பெண்களை பெற்றதாகவும் தெரிகிறது. அது போல் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான போது தனுஷின் இரண்டாவது மகன் லிங்கா 500-க்கு 460 மதிப்பெண்களை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எனக்கூறி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் தான் 10ஆம் வகுப்பு படித்தார். அவர் 1100 க்கு 711 மதிப்பெண்களை பெற்றதாகவும் தமிழில் 200-க்கு 155, ஆங்கிலத்தில் 200-க்கு 133, கணக்கில் 200-க்கு 95, அறிவியலில் 300-206, சமூக அறிவியலில் 200-க்கு 122 என அவர் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10ஆம் வகுப்புக்கு 500-க்குத்தான் மதிப்பெண்கள். அப்படியிருக்கும் போது 1100- க்கு எப்படி என தெரியவில்லை. அது போல் அறிவியலில் 300 க்கு என உள்ளது. அதென்ன 300 என தெரியவில்லை. ஒருவேளை இயற்பியல், வேதியியல், தாவரவியல் என தலா 100 மதிப்பெண்களை குறிக்கிறதா என தெரியவில்லை. விஜய் 1985 கால கட்டத்தில் 10ஆம் வகுப்பு முடித்திருப்பார்.
ஒரு வேளை இது 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் 12ஆம் வகுப்புகளுக்கு 1200க்குத்தான் மதிப்பெண் இருக்கும். அதில் அறிவியல், சமூக அறிவியல் எல்லாம் கிடையாது. எனவே, இது உண்மையான மதிப்பெண்ணாக இருப்பது சந்தேகம்தான். இருப்பினும், இது போன்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பரீட்சை எழுதி அதில் கிடைக்கும் மதிப்பெண்ணை வைத்துதான் ஒருவருக்கு திறமை இருக்கும் என முடிவு செய்ய முடியாது. உதாரணமாக விஜய் தான் ஒரு ஆவரேஜ் ஸ்டூடென்ட் என நிறைய இடங்களில் சொல்லியுள்ளார். ஆனால், அவர்தான் இன்று டாப் ஸ்டார். நடனம், பாட்டு, நடிப்பு , காமெடி என பன்முகங்களில் கலக்கிய அவர் தற்போது அரசியலிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.