fbpx

10ஆம் வகுப்பில் நடிகர் தனுஷ் மகன் எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா..? இந்த நிலைமையிலும் இப்படியா..?

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து நேற்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், நடிகர் தனுஷின் இரண்டாவது மகன் லிங்கா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. அவருடைய மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 8,94,264 மாணவ மாணவியர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55 ஆகும். அந்த வகையில் நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டில் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். அதில் யாத்ரா 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில், அதற்கான ரிசல்ட் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அதில் யாத்ரா அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்ததாக கூறப்பட்டது. அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷின் 2-வது மகன் லிங்கா 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. அதில், லிங்கா தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 96 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 87 மதிப்பெண்களும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் 500 மதிப்பெண்களுக்கு தனுஷின் மகன் லிங்கா 460 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், மகன்கள் இருவருக்கும் பெற்றோரின் பிரிவு வருத்தத்தில் இருந்தாலும் பிள்ளைகள் இவ்வளவு மார்க் எடுத்திருக்கிறார்களே என்று பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த தகவல் உறுதியானது தானா என்பது உறுதியாகவில்லை.

Read More : ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது..!! சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..!!

Chella

Next Post

சிறு பிழைக்கு ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது...! பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு...!

Sat May 11 , 2024
சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஆவணப்பதிவு தொடர்பாக பதிவு அலுவலகத்திற்கு வரும் ஆவணதாரர்களால் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகள் தொடர்பாக உரிய காரணங்களின்றி அலைக்கழிக்கப்படுவதாகவும், அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சார்பதிவாளர்களால் […]

You May Like