மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த அக். 9ம் தேதி உயிரிழந்தார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்கள், பெரும்பணக்காரர்களால் போற்றப்படும் நபராக இருக்கும் ரத்தன் டாடா தனது தொண்டு பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர். அவர் தனது சொத்து, செல்வம், செல்வாக்கு என எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.
ரத்தன் டாடாவின் மரணம் டாடா பேரரசுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய இழப்பு. இதன் மூலம் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா டாடா டிரஸ்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொலாபாவில் ரூ.200 கோடி மதிப்பிலான சொகுசு வீடு, தனியார் ஜெட் விமானம், ஃபெராரி கலிபோர்னியா டி, ஜாகுவார் எஃப் டைப் உள்ளிட்ட சொகுசு வாகனங்களின் கலெக்ஷன் வைத்திருந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் ரத்தன் டாடா. தற்போது ரத்தன் டாடாவின் முந்தைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்தாலும் ரத்தன் டாடா எளிமையான வாழ்க்கையை நடத்தினார். ரத்தன் டாடா குவார்ட்ஸ்-இயங்கும் விக்டோரினாக்ஸ் சுவிஸ் ராணுவ ரீகான் வாட்ச் அணிந்திருக்கும் படம் தற்போது இணையத்தில் வைரலாகிறது. உலக பணக்காரர்கள் கோடிரூபாய் மதிப்புள்ள வாட்ச் அணியும் அதே நேரத்தில், ரத்தன் டாடா அணிந்திருந்த கடிகாரத்தின் விலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
3, 6 மற்றும் 9 எண்கள் தடிமனாக எழுதப்பட்ட கைக்கடிகாரத்தின் விலை சுமார் 10,328 ரூபாய் மட்டுமே. பல சமூக காரணங்களுக்காகவும் புதிய ஸ்டார்ட் அப்களிலும் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் மற்ற தொழிலதிபர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவரின் மறைவிற்கு பிறகு கடிகாரம் மீண்டும் பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
Read more ; PM கிசான் திட்டத்தின் 18வது தவணை இன்னும் பெறவில்லையா..? அப்போ உடனே இத பண்ணுங்க…