இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் சம்பளம், அவர்களுக்கு என்ன வகையான சிறப்பு படிகள் வழங்கப்படுகின்றன? என்ற விவரங்களை அறிய ஆர்வமாக உள்ளீர்களா..? அத்தனை விவரங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1962ஆம் ஆண்டு இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் குழு (INCOSPAR) நிறுவப்பட்டது. 1969ஆம் ஆண்டு இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் உள்ளது.
இஸ்ரோவில் விஞ்ஞானிகளுக்கு அடிப்படை சம்பளத்துடன் மத்திய அரசு ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. வழங்குகிறது. விஞ்ஞானிகளின் கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வெவ்வேறு நிலைகளுடன் தொடர்புடைய ஒவ்வொரு ஊதிய தரத்துடன் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பள விவரம் :
1. பொறியாளர்/விஞ்ஞானி – ST – ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை
2. பொறியாளர்/விஞ்ஞானி – SE ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை
3. பொறியாளர்/விஞ்ஞானி – SF ரூ. 37,400 முதல் ரூ.67,000 வரை
4. பொறியாளர்/விஞ்ஞானி – LG ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை
5. பொறியாளர்/விஞ்ஞானி – H ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை
6. சிறந்த விஞ்ஞானி – ரூ.67,000 முதல் ரூ.79,000 வரை
7. புகழ்பெற்ற விஞ்ஞானி – ரூ.75,500 முதல் ரூ.80,000 வரை
மற்ற சலுகைகள் மற்றும் அலவன்சுகள் :
விஞ்ஞானிகளுக்கு அடிப்படை சம்பளத்துடன் கூடுதலாக சலுகைகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில அலவன்சுகள் மாதந்தோறும், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகளும் ஓய்வுக்குப் பிறகு சில பலன்களைப் பெறுகிறார்கள்.
1). அகவிலைப்படி (DA)
2). வீட்டு வாடகைப் படி (HRA)
3). மருத்துவ வசதிகள்
4). ஓய்வூதியம்
5). செயல்திறன் ஊக்குவிப்பு
6). வருங்கால வைப்பு நிதி (PF)
7). பயணப் படி (TA)