fbpx

மைதா மாவில் என்னென்ன ரசாயனங்கள் கலக்கப்படுகிறது தெரியுமா..? இதை சாப்பிட்டால் அவ்வளவு தான் போல..!!

இனிப்பு மற்றும் காரவகை ஸ்நாக்ஸ்களில் அதிகளவில் மைதா மாவு கலக்கப்படுவதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் அனைத்துமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது. மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் தயார் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கோதுமை மாவு சற்று மஞ்சள் நிறமாகவே இருக்கும். ஆனால், சில இரசாயன பொருட்களை பயன்படுத்தி, மைதா மாவை தயாரிக்கின்றனர்.

இதை தவிர மாவை சுவையூட்ட இரசாயனம், செயற்கை நிறம், தனிம எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை என ஏராளமான பொருட்கள் சேர்க்கப்படுகிறது. ஆகவே, இந்த மைதா மாவில் எந்தவொரு சத்தும் கிடையாது என்று கூறுகிறார்கள். மைதாவை தொடர்ந்து உட்கொள்வதால், இரத்தத்தில் சக்கரையின் அளவை அதிகரிக்கும். எழும்பை அரித்து விடும்.

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படும். உடல் பருமனை அதிகரிக்கிறது. ஜீரண பிரச்சனைகள் உண்டாகும். இதய கோளாறு ஏற்படும். மலச்சிக்கலை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பல வகையான தீமையை ஏற்படுத்தும் மைதா மாவை உண்பதற்கு பதிலாக கோதுமை மாவை உட்கொள்ளலாம். மைதாவுடன் ஒப்பிடுகையில், கோதுமையில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read More : அண்ணா நகரில் அதிரடி காட்டிய போலீஸ்..!! மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்..!! பெண் கைது..!!

English Summary

Doctors say that wheat has a lot of fiber compared to maida.

Chella

Next Post

ரேஷன் அரிசி கழுவும் போது, இந்த ஒரு பொருளை சேர்த்துக்கோங்க.. இனி வேற அரிசியே வாங்க மாட்டீங்க..

Thu Jan 23 , 2025
easy way to clean dirty ration rice

You May Like