fbpx

வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வெளியிட்டது. அதில், வரும் 28ஆம் தேதியில் இருந்துதான் புதிய அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அதுபோலவே, குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.10,000 அபராதம் விதித்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை..!!

ஆனால், பல வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, போக்குவரத்து போலீசார் அபராத தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி வருகின்றனர். நீதிமன்ற வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்தவில்லை என்றால், வண்டி பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை..!!

இதுபோல கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

Thu Nov 3 , 2022
விருதுநகர் மாவட்டம் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் என்ற கோவில் உள்ளது. இக்கோவில் தரையிலிருந்து இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் என்ற சிறப்பு மிக்க கோவில் ஒன்று அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு மாத பௌர்ணமி, பிரதோஷ நாள் மற்றும் அம்மாவாசை தினங்களில் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டு […]

You May Like