நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். விஜயின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய், கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.
கட்சியின் சின்னம் பற்றி கட்சி தலைவர் விஜய், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு 5 சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்து பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.