கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில் “புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நிறுவனத் தலைவர் தேமுதிக எனவும் விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் சந்தனப்பேழையில் இடம்பெற்றுள்ளன.