fbpx

நீங்கள் நல்ல காரியத்திற்கு செல்லும்போது பிணத்தை எதிரில் பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? இன்னும் இருக்கு பாஸ்..!!

ஜோதிட சாஸ்திரப்படி சுப மற்றும் அசுப சகுனங்களுக்கும், நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பொதுவாக நமது பாரம்பரிய வழக்கப்படி சில பொருட்களை மங்கல பொருட்கள் என்றும், சிலவற்றை அமங்கள பொருட்கள் என்றும் வகுத்து வைத்துள்ளோம். இவற்றை நாம் அடிக்கடி காணும் போது அவற்றின் அதிர்வலைகளால் நம்முடைய வாழ்க்கையிலும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. நல்லதோ கெட்டதோ எது நடப்பதற்கு முன்பும் அதற்கான அறிகுறிகள் நமக்கு தெரிந்து விடும். ஆனால், மிக சிலரால் மட்டுமே இந்த அறிகுறிகளுக்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், என்னென்ன நடந்தால் நல்ல சகுனம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* காகம், கிளி, கோழி ஆகியவை நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் பறந்தால் நல்ல சகுனம்.

* சுப காரியங்களுக்கு செல்லும்போது நாய், காளை மாடு, திருவிழா, தேர் ஆகியவை தென்பட்டால் நல்ல சகுனம்.

* குரங்கு, கீரி, கழுகு ஆகியவை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் சென்றால் நல்லது. இதனால், அனைத்து சுப காரியங்களும் நடக்கும்.

* மனதில் ஒரு விஷயத்தை நினைத்து அல்லது பேசிக் கொண்டிருக்கும் பொழுது நாய் குரைத்தால் நல்லது நடக்கும்.

* சுப நிகழ்வுக்காக செல்லும்போது சுமங்கலி பெண், கல்யாணம் ஆகாத பெண்ணை பார்த்தால் நல்ல சகுனம்.

* பிணம் எதிர் வருதல், அழுக்கு துணி தென்படுதல் ஆகியவை நல்ல சகுனம்.

* நிறை குடம், மணமக்கள் தென்பட்டால் நல்ல சகுனம்.

* கோயில் மணி ஓசை கேட்டல், மாட்டு சாணம் தென்படுதல் நல்ல சகுனம்.

* ஒரு பெண் நல்ல காரியம் பற்றி பேசும் பொழுது அல்லது நினைக்கும் பொழுது ஆணும், ஒரு ஆண் நல்ல காரியம் பற்றி பேசும் பொழுது அல்லது நினைக்கும் பொழுது ஒரு பெண்ணும் தும்மினால் நிச்சயம் நினைக்கும் காரியம் வெற்றி அடையும்.

Chella

Next Post

அண்ணாநகரில் அதிர்ச்சி..!! மாடு முட்டி தூக்கி வீசியதில் முதியவர் பலி..!! பொதுமக்கள் அச்சம்..!!

Tue Jan 23 , 2024
சென்னை அண்ணாநகர் நடுவாங்கரையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (76). இவர், நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த மாடு திடீரென முட்டி தூக்கி வீசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

You May Like