fbpx

’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62-வது படமான இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அஜித்தின் 63வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியான நிலையில், இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.

இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 2024 மே 10ஆம் தேதி அன்று ஐதராபாத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

Read More : பிரபல பாடகருக்கு இப்படி ஒரு நிலைமையா..? ஹோட்டல் வேலைக்கு செல்லும் பரிதாப நிலை..!!

Chella

Next Post

'இனி இத மட்டும் வாங்கி குடிச்சிடாதீங்க..' உயிருக்கே ஆபத்து! எச்சரிக்கை!!

Fri May 3 , 2024
நீங்கள் குளிர்பான பிரியர் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, குளிர் பானங்களின் சுவை அனைவருக்கும் பிடிக்கும் என்பதால், தண்ணீருக்கு மாற்றாக தாகத்தை தணிக்க குளிர்பானத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குளிர் பானங்கள் குடிப்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. குளிர் பானத்தை அதிகமாக குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள். குளிர் பானங்கள் குடிப்பதால் ஏற்படும் […]

You May Like