fbpx

உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை எப்போது தொடக்கம் தெரியுமா??

இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது.

இதனிடையே அக்.15ஆம் தேதி நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் என்பதால், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான தேதியை மாற்றம் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மேலும் சில கிரிக்கெட் வாரியங்களும் தேதி மாற்றம் செய்வதற்காக கோரிக்கை வைத்துள்ளதாகவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டாலும், பின்னர் போட்டி நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நேரடி டிக்கெட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் டிக்கெட் மட்டும் வைத்திருந்தால் அனுமதியளிக்கப்படாது என்றும், கவுன்டரில் வாங்கியிருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் போட்டி நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் 40 டிக்கெட்டை வாங்குவதற்கும், 10 சதவிகித டிக்கெட்டுகளை ஐசிசி டூர் பார்ட்னர்களும் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு உலகக்கோப்பை போட்டிக்கும் 300 டிக்கெட்டுகள் ஐசிசி மற்றும் பிசிசிஐ-க்கு வழங்கப்படும். அதேபோல் லீக் போட்டிகளுக்கு ஐசிசி நிர்வாகத்திற்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் தரப்பில் 1295 டிக்கெட்டுகளும், இந்திய அணி மற்றும் அரையிறுதி போட்டிகளுக்கு 1355 டிக்கெட்டுகளும் வழங்கப்பட வுள்ளது.

Maha

Next Post

எதிர்வரும் 4️ நாட்களுக்கு இந்த 14 மாநிலங்களில் கனமழை….! எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்…..!

Sat Jul 29 , 2023
கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகம் குறிப்பாக பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி போன்ற வட இந்திய மாநிலங்களில் கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது இந்த நிலையில் தான் அடுத்த 4 நாட்களுக்கு இந்தியாவின் 14 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வரையில் […]

You May Like