fbpx

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கு தெரியுமா..? அட இந்த இடத்துக்கு அவ்வளவு பவர் இருக்கே..!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மாநாடு நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் உள்ளிட்ட இடங்களில் மாநாடு நடத்துவதற்காக திடலை புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலம் மாவட்டத்தில் நடத்துவதற்காக முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முதல் மாநில மாநாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட திடல் அமைய உள்ளதாகவும், மாநாட்டை செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திடலானது 2014 பாராளுமன்றத் தேர்தலின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதே திடலில் மாநாடு நடத்திய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். சமீபத்தில் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி இதே கெஜல்நாயக்கன்பட்டி திடலில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

எனவே வரலாற்று சிறப்புமிக்க இந்த கெஜல்நாயக்கன்பட்டி திடலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சேலம் மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Read More : ரூம் எடுத்து தங்கிய 17 வயது ஜோடி..!! மாணவிக்கு அதிகளவு ரத்தப்போக்கு..!! பதறியடித்து ஓடிய மாணவன்..!! கடைசியில் நடந்த சோகம்..!!

English Summary

The general secretary of the party, Bussy Anand, conducted an investigation regarding the holding of the first state conference of actor Vijay’s Tamil Nadu Victory Kazhagam in Salem.

Chella

Next Post

மக்களே..!! இந்த தேதி தான் கடைசி..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!! இனி வாய்ப்பு கிடையாதாம்..!!

Fri Jul 26 , 2024
The deadline for obtaining birth certificate with child name has been extended till 31st December 2024 for births registered before 01.01.2000 and for births registered 15 years after 01.01.2000.

You May Like