ஆந்திராவின் காலகஸ்திக்கு நிகராக தமிழ்நாட்டில் ஒரு கோயில் திகழ்கிறது. இந்தக் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கத்தரி நத்தம் கிராமத்தில் உள்ளது. அப்பகுதி மக்களால் தென்மூலவராகதி என அழைக்கப்படுகிறது.
கோயில் அமைப்பு: இந்த கோயிலில் மூலவராக காலஹஸ்தீஸ்வரரும், அம்பாளாக ஞானாம்பிகையும் காட்சி கொடுக்கின்றனர். பொதுவாக சிவாலயங்களில் நுழைவாயில் உள்ளே எதிர்புறத்தில் நந்தியும் பலிபீடமும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோயிலில் வித்தியாசமாக பிரதான வாயிலுக்கு முன்பாகவே வெளி மண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் காணப்படுகிறது. ராஜகோபுரம் அமைப்பின்றி சமதளம் போன்ற அமைப்புடன் காணப்படும்.
இதன் வழியாக உள்ளே சென்றால் முன் மண்டபம், அதனை அடுத்து மகா மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தை 12 தூண்கள் 12 ராசிகளை குறிக்கும் வகையில் தாங்கி நிற்பது சிறப்பான ஒன்றாகும். உள்ளே அன்னை ஞானாம்பிகை தெற்கு நோக்கி நின்றவாறு திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். கருவறை அமைந்திருக்கும் அர்த்தமண்டபத்தின் வெளிப்புறத்தில் லிங்கத் திருமேனியும் அதன் அருகே ராகு, கேதுகளை குறிக்கும் நாகர் சிலைகளும் தனி மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த லிங்க திருமேனி தான் காளத்திபெருமானாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.
தொடர்ந்து கஜலட்சுமி, திருஞானசம்பந்தர், முருகப்பெருமான், தனிமண்டபத்தில் நவகிரக சன்னதி, தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்கை, கன்னிமூல கணபதி ,வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது.
பக்தர்களின் நம்பிக்கை: ஒருவருடைய ஜாதகத்தில் எத்தகைய கிரக தோஷங்கள் இருந்தாலும் இந்த தலத்தில் வந்து வணங்கினால் ஞானாம்பிகை அருளால் அவையெல்லாம் நீங்கிவிடும் என்பதை நம்பிக்கையாகும். சிறந்த இல்லற வாழ்க்கை, குழந்தை பேறு, கல்வி வேலை வாய்ப்பு என அனைத்தும் அருள்பவள் ஞானாம்பிகை என்ற நம்பிக்கை பக்தர்களிடத்தில் உள்ளது.
இங்குள்ள நவகிரக சன்னதியில் ராகு, கேது தோஷ பரிகார பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் ராகுகால காலத்தில் நவதானியங்களை வைத்து செய்யப்படும். இந்த வழிபாடு நாகதோஷம் நீங்கி திருமணம் மற்றும் குழந்தை பேறு கிட்டுவதற்கு கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.
Read more: விஜய் டிவி நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு..? சீரியலில் நடிக்க தடை..!! என்ன காரணம்..?