fbpx

‘30,000 பேர் வசிக்கும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பு’ வியக்கவைக்கும் பிரம்மாண்ட கட்டடம் எங்க இருக்கு தெரியுமா..?

சீனாவில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பான தகவல் சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. 36 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கட்டடம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஆச்சரியமூட்டும் பல கட்டிடங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் இப்போது மொத்தம் 30,000 பேர் வசிக்கின்றனர். இத்தனை பேர் இந்த கட்டிடத்தில் வசிக்கும் நிலையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த கட்டித்திற்குள்ளேயே இருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.

சீனாவின் ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் கட்டப்பட்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட் தான் அந்தக் குடியிருப்பு. S வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக்  கட்டிடத்தில் மொத்தம் 30,000 பேர் வாழ்கின்றனர். இந்த குடியிருப்பு ஒரு நகரத்தைப் போலவே இருக்கிறது. இந்த 36 மாடி கட்டிடம் 2013 இல் திறக்கப்பட்டது. அப்போது 20,000 பேர் அதில் வாழ்ந்தனர். இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை 30,000 எட்டியுள்ளது.

இந்த அபார்ட்மெண்ட் ஒரு காலத்தில் ஹோட்டலாக இருந்தது. ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 206 மீட்டர் உயரம் கொண்டது. மேலும் இது 36 மாடிகளைக் கொண்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு பெரிய உணவு விடுதி உள்ளது. நீச்சல் குளம், முடிதிருத்தும் கடை,  சலூன், பல்பொருள் அங்காடி மற்றும் இணைய தள மையம் ஆகியவையும் உள்ளன. இந்த கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் எதற்கும் வெளியே செல்ல தேவையில்லை. இந்த கட்டிடத்திலேயே அவர்களுக்கான அனைத்தும் கிடைக்கிறது.

‘கிழக்கு ஆசியா பகுதியில் போர் பதற்றம்’ தைவான் மீது சீனா திடீர் ராணுவ ஒத்திகை நடத்துவது ஏன்?

Next Post

'பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2,000 பேர்!'- வெளியான அதிர்ச்சி தகவல்!

Mon May 27 , 2024
பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக ஐ.நா., கூறியுள்ளது. தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம்( மே 24) நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]

You May Like