மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கீழ் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார். அதில் வெளியான தகவல் தற்போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்படி அது என்ன தகவல் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கடந்த 2024 மார்ச் இறுதி நிலவரப்படி, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 394 என்றுள்ளது. இதில், அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்கள் உள்ளன. அதாவது, அதிக சாதிய வன்கொடுமை நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில் மதுரை முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் திருநெல்வேலி மாவட்டம், மூன்றாவது இடத்தில் திருச்சி மாவட்டம், நான்காவது இடத்தில் சேலம் மாவட்டம், ஐந்தாவது இடத்தில் கோவை மாவட்டம், ஆறாவது இடத்தில் திருப்பூர் மாவட்டம், ஏழாவது இடத்தில் சென்னை, எட்டாவது இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒன்பதாவது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் இடம்பெற்றுள்ளது.
Read More : இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை..!! மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்..!!