fbpx

இந்தியாவின் முதல் கிராமம் எது தெரியுமா.? அதன் சிறப்பு அம்சங்கள் என்ன.?

இந்தியாவின் முதல் கிராமம் எங்கு இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா.? இது உங்களுக்கு விந்தையாக கூட இருக்கலாம். இந்தியா மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமத்திற்கு தான் இந்தியாவின் முதல் கிராமமென பெயரிடப்பட்டிருக்கிறது. இது ஏன் அவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது அங்கு என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

வட இந்திய மாநிலமான உத்ராக்கண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளம் மானா என்று அழைக்கப்படும் இடம். இந்த இடத்திற்கு தான் இந்தியாவின் முதல் கிராமம் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிக்கு ஏன் அவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது என்றால் கடந்த 2022 ஆம் வருட அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் எல்லை பகுதி கிராமங்கள் தான் இந்தியாவின் முதல் கிராமங்கள் என அறிவிப்பு செய்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த கிராமத்திற்கு இந்தியாவின் முதல் கிராமம் என பெயர் மாற்றப்பட்டு இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் இந்தியாவின் முதல் கிராமம் என பெயர் பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. இது இந்துக்களின் புனித யாத்திரை செல்லும் தளமான பத்ரிநாத் திற்கு அருகில் உள்ள ஒரு சுற்றுலாத்தலமாகும். இந்த பகுதிக்கு நாடெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 3219 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. சரஸ்வதி நதிக்கரையில் இருக்கக்கூடிய இந்த கிராமத்தில் வசுதாரா நீர்வீழ்ச்சி மாதமூர்த்தி கோவில் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தப்ட் குந்த் மற்றும் நீலகண்ட சிகரமாகிய சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. அன்புள்ள புனித தலங்களை தரிசிப்பதற்காகவும் சுற்றுலா தலங்களை பார்வையிடவும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

Kathir

Next Post

'தற்கொலை முடிவுக்கு தள்ளிய பிக்பாஸ் நிகழ்ச்சி’..!! ’பிரதீப்ப இப்போ புரிஞ்சிக்கிட்டேன்’..!! ஐஷூ உருக்கம்..!!

Mon Nov 20 , 2023
விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் உதகை ஏ.டி.எஸ் நடன குழுவை சேர்ந்த ஐஷு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளில் நடனமாடியதன் மூலம் பிரபலமானவர். கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்றதன் மூலம் ஐஷு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம் நிக்சனிடம் காட்டிய நெருக்கம் தான் என்று கூறப்படுகிறது. மேலும், இவரின் சில செயல்களும், பேச்சுகளும் ரசிகர்களை […]

You May Like