fbpx

விண்வெளியில் முதலில் சாப்பிட்ட உணவு எது?… உலகின் மிகப்பெரிய உயிரினம் எது தெரியுமா?… நீங்கள் அறிந்திராத சுவாரஸிய தகவல்கள்!

பாண்டாக்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ராட்சத பாண்டாக்கள் ஒரு நாளைக்கு சுமார் 13 கிலோ கிராம் அளவில் அதற்கு பிடித்த உணவான மூங்கிலை சாப்பிடுகிறது. ஒரு வருடத்திற்கு 5000 கிலோவிற்கும் அதிகமான மூங்கிலை சாப்பிடுகிறது. நாம் வீடுகளில் செல்லமாக வளர்க்க கூடிய பூனைகளால் இனிப்பான எதையும் சுவைக்க முடியாது. டைனமைட் தயாரிக்க தேவையான பொருட்களில் ஒன்று வேர்க்கடலை. உலகின் மிகப்பெரிய உயிரினம் ஒரு பூஞ்சை இது 2020 ஒரு ஏக்கர் பரப்பளவில் அமெரிக்காவின் ஒரேகானில் இன்னும் வளர்ந்து வருகிறது. கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

நீங்கள் காலையில் மலம் கழிக்கும் பொழுது உங்களுடைய கழிவு சாக்லேட் வாசனையுடன் செல்ல வேண்டுமா? அதற்கு ஒரு மாத்திரையும் உள்ளது. வரலாற்றில் மிகக் குறுகிய போர் 38 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது தெரியுமா உங்களுக்கு. நீங்கள் தூங்கும் பொழுது எந்தவித மணத்தையும் நுகர முடியாது. நல்ல தூக்கத்தில் கெட்ட வாசனையோ நல்ல வாசனையோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு தெரியாது. ஒரு சில கட்டிகள் முடி, பற்கள், எலும்புகள், விரல் நகங்களில் கூட வளரும். உங்களுடைய மூளை சிந்திப்பதற்காக பத்து வாட் ஆற்றலை பயன்படுத்துகிறது.

நீர்யானையின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நீங்கள் குளிர்ச்சியாக இருக்கும் பொழுது உங்களுடைய விரல் நகங்கள் வேகமாக வளரும். விண்வெளி வீரர்கள் விண்வெளியில் முதலில் சாப்பிட்ட உணவு ஆப்பிள் சாஸ். வவ்வால்கள் ஒரு இரவில் 3000 பூச்சிகளை சாப்பிடும். சாதாரணமாக நாம் இருமுவது 96 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். நம்முடைய தும்மல் 160 கிலோமீட்டர் வேகத்தை விட அதிகமாக இருக்கும். ஒரு சில மீன்கள் இருமும் பழக்கம் கொண்டதாம். ஒரு வருடத்தில் 31,556,926 வினாடிகள் உள்ளன. ஒருசில வாசனை திரவியங்களில் உண்மையில் திமிங்கில கழிவு உள்ளது. நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் 20 சதவிகிதம் உங்கள் மூளையால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சுனாமியால் ஜெட் விமானம் போல வேகமாக பயணிக்க முடியும்.

Kokila

Next Post

HCL நிறுவனத்தில் B.Tech முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு...! 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

Sun Oct 8 , 2023
HCL நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Consultant பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு கிடையாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E., அல்லது B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.50,000 முதல் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் […]

You May Like