fbpx

பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள் யார் தெரியுமா..? ஒன்னுமே பண்ணாத இவருக்கு இவ்வளவா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதிக்கு ரூ.18 கோடி சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தாண்டி போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்டு 2-வது நாளிலேயே சண்டை போட்டு கன்டெண்ட் கொடுக்க ஆரம்பித்துள்ள ரவீந்தர், ரஞ்சித்துக்குத் தான் 18 போட்டியாளர்களில் அதிக சம்பளம் எனக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஒரு நாளைக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறதாம். இவர்கள் இருவரும் 100 நாட்கள் இருந்தால் 50 லட்சம் பரிசு கொடுக்கவே தேவையில்லை. சம்பளமே 50 லட்சம் வந்து விடும் என்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தீபக் உள்ளிட்டோருக்கு தினமும் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜாக்குலின், தர்ஷா குப்தாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறதாம். மற்ற போட்டியாளர்களான பாரதி கண்ணம்மா அருண் பிரசாத், அர்ணவ், அன்ஷிதா, சுனிதா கோகோய், விஜே விஷால், தர்ஷிகா, சத்யா என சீரியல் நடிகர்களுக்கு அவர்கள் சீரியலில் வாங்கும் சம்பள அடிப்படையில் இங்கேயும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது, ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

குறைவான சம்பளம் யாருக்கு..? கானா பாடகர் ஜெஃப்ரி, செளந்தர்யா, ஆர்ஜே ஆனந்தி மற்றும் முத்துக்குமாருக்கு தான் இருப்பதிலேயே குறைவான சம்பளம் என்றும் இவர்களுக்கு தினமும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். இந்நிலையில், ரூ.50,000 சம்பளம் வாங்கும் ரஞ்சித் அல்லது ரவீந்தர் இருவரில் ஒருவரை இந்த வாரமே வீட்டுக்கு அனுப்பும் முடிவில் விஜய் டிவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : ’டீச்சர் நீங்க எங்ககூட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும்’..!! குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர்கள்..!!

English Summary

The information about the salary of Bigg Boss contestants is also leaked now.

Chella

Next Post

நீங்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரூ.35,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

Thu Oct 10 , 2024
10.10.2024 has been announced as the last date to apply for the post of Technical Assistant.

You May Like