fbpx

கலைஞர் விழாவில் அவரை போலவே நடிக்க இருப்பது யார் தெரியுமா..? அட இந்த நடிகரின் மகனா..?

இன்று ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இதன் விழா நடைபெறுகிறது. கலைஞரின் புகழை பாட இங்கு யாருக்கும் வயது இல்லை. ஆனாலும், அவரை கொண்டாட ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அனைத்து திரைப்பிரபலங்களும் ஒன்று கூடுகிறார்கள்.

அரசியலிலும், சினிமாவிலும் தனது முழு ஆளுமையை காட்டியவர் கலைஞர் கருணாநிதி. பல போராட்டங்களை சந்தித்தவர். 6 வரலாற்றுப் புதினங்கள், 9 கவிதை தொகுப்புகள், 16 சிறுகதை தொகுதிகள், 18 நாடகங்கள், 18 திரைப் பாடல்கள், 24 கதை எழுதிய திரைப்படங்கள், 32 திரைக்கதை எழுதிய திரைப்படங்கள், 57 வசனம் எழுதிய திரைப்படங்கள் என கலைஞரின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவருக்கான விழாவை ஒரே நாளில் முடித்து விட முடியாது. ஆனாலும், ஒரு நூற்றாண்டு என்பது ஒரு தனி சாம்ராஜ்யம். சினிமாவுக்காக கலைஞரின் அர்ப்பணிப்பு ஆகச்சிறந்தது. இன்று நடக்க இருக்கும் கலை நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து கொண்டு போவது இயக்குனர் விஜய் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், கலைஞரின் சிறு வயது முதல் அவர் இருந்த காலம் வரை அவரை பிரதிபலித்தே பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க போவதாகவும் கூறப்படுகிறது. அதனால், அவருடைய இளம் வயது தோற்றத்தில் நடிகர் உதயாவின் மகன் தான் நடிக்க இருக்கிறாராம். அது சம்பந்தமான புகைப்படம் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Chella

Next Post

சாதனை படைக்கப்போகும் ஆதித்யா எல் 1..! இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கும் தென்காசியை சேர்ந்த நிகர் ஷாஜி..!! யார் இவர்..?

Sat Jan 6 , 2024
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று எல் 1 புள்ளியை சென்றடைகிறது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, புவி வட்டபாதையில் […]

You May Like