fbpx

நடிகர் முரளியின் மகன்களை தெரியும், மகள் யார், என்ன செய்றாங்க தெரியுமா?

முரளியின் மகள் காவியா தன் குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் முரளி. அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் 46 வயதிலேயே மாரடைப்பால் இறந்துவிட்ட நிலையில் தற்போது அவரது மகன் அதர்வா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

முரளிக்கு மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் காவ்யா, இரண்டாவது பிறந்தவர் அதர்வா, மூன்றாவது ஆகாஷ் என்ற மகன் பிறந்தார். இதில் அதர்வா நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதர்வாவின் தம்பி ஆகாஷ் தன்னுடன் கல்லூரியில் படித்த சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மகள் ஆவார். முரளியின் 2-வது மகனும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

முரளியின் மூத்த மகள் காவியா யாரு? இப்போ அவங்க என்ன செய்றாங்கனு நிறைய பேருக்கு தெரியாது. முரளியின் மகள் காவியா தன் குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான ஆதித்யா என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது கணவர், பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

Next Post

’பெண்களுக்கு பிரச்சனை என்றால் என் மனைவி பத்ரகாளியாக மாறிவிடுவார்’..!! அன்புமணி ஒரே போடு..!!

Thu Apr 4 , 2024
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக கூட்டணியுடன் கைகோர்த்துள்ள பாமக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தருமபுரியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்களும் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட கணவர் அன்புமணி ராமதாஸ், ”பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் […]

You May Like