fbpx

OTT star : அடேங்கப்பா! ஒரு எபிசோடுக்கு மட்டுமே இத்தனை கோடியா? ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் அந்த ஸ்டார் யார் தெரியுமா?

இந்திய அளவில் ஓடிடியில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நடிகர் அஜய் தேவ்கன் முதலிடத்தில் உள்ளார். 

கொரோனா காலத்தில் ஓடிடியின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. திரையரங்குகள் மூடப்பட்டு மக்கள் ஓடிடி கலாச்சாரத்திற்கு பழக துவங்கிய நிலையில், இப்போதும் பெரிய படங்கள் என்றால் மட்டுமே திரையரங்கை நோக்கி செல்கிறார்கள். பலரும் ‘அடுத்த ஒரே மாதத்தில் ஓடிடியில் வந்துவிடும், பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர்.

இன்று திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமையே பல கோடிக்கு விற்பனையாகி வருகின்றன. இதனால் ஓடிடி தளங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் ஓடிடி தொடரில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜய் தேவ்கன் உள்ளார். ஒரு எபிசோடில் நடிப்பதற்கு அஜய் தேவ்கன் ரூ.18 கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதன்மூலம் வெப்தொடரில் நடிப்பதற்காக இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்கிற சாதனையை படைத்துள்ளார் அஜய் தேவ்கன். 

அஜய் தேவ்கன் நடிப்பில் சமீபத்தில் ‘ருத்ரா’ என்ற வெப்தொடர் வெளியானது. ஏழு எபிசோட்களை கொண்ட அந்தத் தொடருக்காக மொத்தம் ரூ.126 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கடுத்த இடத்தில் ‘தி ஃபேமிலிமேன்’ தொடர் நடிகர் ஸ்ரீகாந்த் திவாரி இருக்கிறார். இவர் ஓடிடி சீரிஸின் ஒரு எபிசோடுக்கு ரூ. 10 கோடி வாங்குகிறார். நடிகர்கள் மட்டுமல்லாது நடிகைகளில் பிரியங்கா சோப்ரா, சமந்தா, தமன்னா ஆகியோரும் ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இருக்கின்றனர்.

Next Post

அதிர்ச்சி! 'தமிழகத்தில் உள்ள காடுகள் இன்னும் 25 ஆண்டுகளில் முட்கள் நிறைந்த பாலைவனமாக மாறும்' - ஆய்வில் தகவல்!

Mon May 6 , 2024
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளைத் தணிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் 25 ஆண்டுகளில் அதுதான் தமிழகத்தின் எதிர்காலம் என்று என்று ஓர் ஆய்வு எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் (சிசிசிடிஎம்) பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொண்டது. ‘தமிழ்நாட்டின் பருவநிலை பாதிப்பு மதிப்பீடு மற்றும் தழுவல் திட்டம் – வன வாழ்விடம் பொருத்தம்’ என்ற தலைப்பில், ஆய்வு அறிக்கை வெளியானது. அதன்படி தமிழகத்தில் உள்ள […]

You May Like