fbpx

உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண் யார் தெரியுமா?… சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… பெண் பணக்காரர்கள் பட்டியல்!

உலகில் அதிக பெண் பணக்காரர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உலகிலேயே பெண் பணக்காரர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 9 பெண் பணக்காரர்கள் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சாவித்திரி திண்டல் 17.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார பெண்மணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சிட்டி இன்டெக்ஸ் சமீபத்தில் எடுத்த ஆய்வின்படி, ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர் பட்டியல் மூலம் அதிக பெண் பணக்காரர்கள் வசிக்கும் நாட்டின் பட்டியலில் 92 பெண் பணக்காரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 46 பெண் பணக்காரர்களுடன் சீனா 2ம் இடத்திலும், 3ம் இடத்தில் உள்ள ஜெர்மனியில் 32 பேரும், 4ம் இடத்தில் 16 பேருடன் இத்தாலியும் உள்ளன. மேலும், 5வது இடத்தில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் நாடுகளில் தலா 9 பெண் பணக்காரர்கள் உள்ளன.

அமெரிக்கா ஏற்கனவே ஆண்கள் கோடீஸ்வரர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் போன்ற கோடீஸ்வரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி, ஹாங்காங் டெக் மொகுல் Zhou Qunfei என்பவர் தான். இவர் $6.6 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார், அதே நேரத்தில் Canva இணை நிறுவனர் Melanie Perkins என்பவரின் நிகர மதிப்பு $3.62 பில்லியன் ஆகும். இந்திய தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியான 72 வயதான சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது $17.3 பில்லியன் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள மற்ற பெண்களில் லீனா திவாரி, ஃபால்குனி நாயர், ஸ்மிதா கிருஷ்ணா-கோத்ரேஜ், அனு ஆகா மற்றும் கிரண் மஜும்தார்-ஷா ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம்!... நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு!... எந்த நாட்டில் தெரியுமா?

Sat Mar 11 , 2023
நீச்சல் குளங்களில் மேலாடையின்றி குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனியின் பெர்லின் நகர நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் 33 வயது பெண் ஒருவர் பெரிலின் நகரில் உள்ள பொது நீச்சல் குளம் ஒன்றில் தனது திறந்த மார்பகங்களை காட்டியவாறு சூரிய குளியலில் ஈடுபட்டார். தனது மார்பகங்களை மறைக்குமாறு அங்கிருந்தவர்கள் அவரை பணித்ததால் அவர் நீச்சல் குளத்தில் இருந்து பலவந்தமாக […]

You May Like