திரையுலக பிரபலங்கள், நடிகர், நடிகைகள், ரசிகர்கள் உள்ளிட்டோர் மாரிமுத்துவின் உடலை பார்க்க வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவின் உடலை பார்க்க சென்றிருந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குநர் திருச்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாரிமுத்து அவர்களின் மீது பலவிதமான விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், இங்கு வந்து பார்க்கும் போது அவரின் மீது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இதுதொடர்பாக உங்கள் கருத்து என்ன? என்று ஒரு செய்தியாளர் கேட்டார்.
அதற்கு திருச்செல்வம் பதிலளிக்கையில், “விமர்சனங்கள் தான் அவரின் மேல்காட்டும் அன்பு, ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் குணசேகரனாக அவரை ரசித்தவர்களுக்கு இது ஒரு பேரதிர்ச்சி” என்று கூறினார். மேலும் “நன்றாக பேசக்கூடியவர், நிறைய விஷயங்களில் விவாதிப்பார், புகழ் இருக்கும்போது பேசினால்தான் ரசிகர்கள் கவனிப்பார்கள் என்று அடிக்கடி கூறுவார்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றொரு ஊடகவியலார் “எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய கதாபாத்திரம், அவரின் இழப்பு எவ்வாறானது என கேட்க, மிக பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார். அத்தோடு குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்து யார் வருவார்கள் என்ற கேள்விக்கு இயக்குநர், “இது இப்போது பேசுவதற்கான நேரம் இல்லை” என்று தனது கருத்தை தெரிவித்தார்.