மார்கழி மாதம் என்பது வானுலகில் தேவர்கள் துயில் எழும் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து ஆலய வழிபாடு செய்ய வேண்டும். ஆனால், மார்கழி மாதத்தில் ஏன் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா..? மார்கழி மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட இறைவனை அடையும் விழாக்கல் அனுசரிக்கப்படுகிறது.
மார்கழி மாதம் என்பதை ‘பீடை மாதம்’ என்று ஒதுக்கி வைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில், மார்கழி மாதம் ‘பீடை மாதம்’ கிடையாது. பீடு உடைய மாதம் என்பதையே திரித்து பீடை மாதம் என்று சொல்லி வருகிறோம். பீடு என்றால் பெருமை உடைய மாதமாகும். அதனால் தான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்கிறார். இந்த மாதத்தில் இறை சிந்தனை மேலோங்க வேண்டும். கிராமங்களில் இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது என்ற சொலவடை உண்டு.
மார்கழியில் விதைத்தால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய் விடும். அதே காரணத்தால் தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று முன்னோர்கள் கூறி வந்தனர். குலம் தழைக்க வேண்டும் என்கிற அக்கறையும், நம் சந்ததி சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற அன்பும் தான் காரணம். ஆடி மாதம் அம்பிகைக்குரிய மாதம். அதே போல, மார்கழி இறைவனுக்குரிய மாதம். இந்த மாதங்களில் இறை சிந்தனையை தவிர வேறு சிந்தனையும் இருக்கக் கூடாது என்பதால், திருமணம் செய்யப்படுவதில்லை.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து வெளியில் வரும் போது, அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும். இயற்கையாக கிடைக்க கூடிய இந்த அதீத ஆக்ஸிஜன் உடலுக்கு முழுவதும் தேவையான நலனை தந்து விடும். இதனால் தான், மார்கழி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்து விட வேண்டும். அதனால் தான் மார்கழி மாதத்தின் அதிகாலையில் சட்டை அணியாமல் வீதிகளில் பஜனை வருவது அத்தனை விசேஷமானது.
Read More : ”அந்த ஆட்டுக்கும் இந்த ஆட்டுக்கும் தொடர்பு”..!! விஜய், அண்ணாமலையை வெச்சி செய்த திண்டுக்கல் லியோனி..!!