fbpx

இந்த பொருளின் விலை ஏன் இப்படி இருக்கு..? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா..?

வணிக தளங்களில் பெரும்பாலான பொருட்களின் விலை 9 என முடிவடையும். ஆனால், இது ஒரு வியாபார தந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும், கடைகளுக்கு சென்று பல கோடி பொருட்களை வாங்குகின்றனர். அவற்றின் விலைகள் பெரும்பாலும் 9 அல்லது 99 அல்லது 999 என முடிவடைவதை காணலாம். அந்த பொருட்களின் விலைகள் ஏன் இப்படி நிர்ணயம் செய்யப்படுகின்றன? உண்மையில் இது ஒரு வியாபார தந்திரம். .

பேட்டா செருப்பு

பேட்டா நிறுவன செருப்புகளின் விலையை கவனித்தால் கூட பெரும்பாலும், ரூ.299.99 அல்லது ரூ.399.99 அல்லது ரூ.159.9 என இருக்கும். விலையின் இறுதியில் எண் 9 கட்டாயம் இடம்பெறும் சூத்திரம் முதலில் பாட்டா நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் இது பேட்டா விலை நிர்ணயம் என்றும் அழைக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு பொருளின் விலை ரூ. 199 என்று வைத்துக்கொள்வோம். இது ரூ.200-ஐ காட்டிலும் ஒரு ரூபாய் தான் குறைவு. ஆனால், ரூ.199ஐ பார்க்கும்போது அடடே ​ரூ.200-ஐ விட மிகக் குறைவு என்று பிரமை நமது மனதை ஆட்கொள்கிறது.

யூசி பெர்க்லி ஆய்வின்படி, ஒரு பொருள் ரூ. 200க்கு விற்கப்பட்டதை விட, ரூ.199-க்கு விற்பனை செய்யப்படும்போது 3 முதல் 5 சதவிகிதம் கூடுதலாக விற்பனை செய்கிறது. ரூ. 200 விட ரூ. 199 என்ற எண் மிகவும் குறைவாக இருப்பதாக நமது மூளை நினைப்பதே இதற்கு முக்கிய காரணம். ஒரு எண்ணின் இடதுபுற இலக்கத்தைப் பார்த்து முடிவெடுப்பது இடது இலக்க சார்பு என்று அழைக்கப்படுகிறது. இடது இலக்க சார்பு நம் நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள வணிகர்களுக்கு லாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது.

ஆய்வு சொல்வது என்ன?

ஒரு மளிகைக் கடையில் ரூ.99, ரூ.199, ரூ.999 போன்ற விலையுள்ள பொருட்கள், ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.1000 விலையில் விற்கப்படும் பொருட்களை விட அதிகமாக விற்கப்படுகிறதாம். காரணம் 9 என்ற இலக்குடன் முடிவடையும் விலை தான் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். உதாரணத்திற்கு ஒரு காரையே எடுத்துக் கொள்வோம். 80,000 கிலோமீட்டர்கள் ஓடிய காரை விட, 79,999 கிலோமீட்டர்கள் ஓடிய கார் என சொன்னால் அது செகண்ட் ஹேண்டிலும் அதிக விலைக்கு விற்பனையாவதாக டொராண்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு 10,000 கிலோமீட்டருக்கும் இது பொருந்தும் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. நீங்களும் உங்கள் காரை விற்க நினைத்தால், ஸ்பீடோமீட்டரில் கடைசி எண் 9 என்பதை உறுதி செய்து விற்றால், அதிக பணம் பெறலாம் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் ஆன்லைனில் விற்க நினைக்கும் ஏதேனும் ஒரு பொருளின் விலை ரூ. 2,000 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதன் விலையை ரூ. 1,999 என நிர்ணயித்தால், ரூ. 2,000க்கும் குறைவான தயாரிப்புகளுக்கான ஆன்லைன் தேடல்களில் உங்கள் பொருளும் பட்டியலிடப்படும். இது உங்களது பொருளின் விற்பனைக்கான வாய்ப்பை அதிகரிக்க உதவும்.

Read More : கரைபுரண்டோடும் வெள்ளம்..!! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

English Summary

Most of the items on trading sites will end up with a price of 9. But how many of us know that this is a business trick?

Chella

Next Post

”பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது”..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Fri Jul 19 , 2024
The High Court has directed the school education department not to ask transfer certificates from students transferring from one school to another.

You May Like