நாம் அன்றாடம் பார்க்கும் பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் உண்மையான காரணம் பற்றி பலரும் தெரிந்திருப்பதில்லை. அந்த வகையில் இன்று நாம் ஏன் ஆம்புலன்ஸில் ‘ambulance’ பெயர் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது என்பதைப் பற்றி பார்க்கலாம். சில சமயம், நாம் ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பார்த்திருப்பீர்கள், அதைப் பார்க்கும்போது, ஏன் ஆம்புலன்ஸ் பெயரை முன்பக்கத்தில் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது என்ற கேள்வி எழும்.. அதற்கான பதிலை தற்போது தெரிந்து கொள்ளலாம்..

ஆம்புலன்சில் ஏன் தலைகீழ் பெயர் எழுதப்பட்டுள்ளது? ஆம்புலன்ஸ் வாகனங்களில் எப்போதும் தலைகீழாக அதாவது ECNALUBMA என்று எழுதப்பட்டிருக்கும். உண்மையான விஷயம் என்னவென்றால், அதன் பின்னால் ஒரு வித்தியாசமான உத்தி பின்பற்றப்பட்டுள்ளது..
ஆம்புலன்ஸில் உள்ளவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மிக விரைவில் மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, முன்னாள் செல்லும் வாகனத்திற்கு பின்னால் ஆம்புலன்ஸ் வருகிறது என்பதை தெரிவிக்கும் வகையில், ambulance என்ற வார்த்தை தலைகீழாக எழுதப்பட்டிருக்கும்.. பொதுவாக நாம் எந்த வார்த்தையை கண்ணாடியில் பார்த்தாலும் அது தலைகீழாகவே தெரியும்.. ஆனால் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தை தலைகீழாக எழுதி இருப்பதால் அது, முன்னால் செல்லும் வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடியில் சரியாக தெரியும்.. ஆம்புலன்ஸ் வாகனத்தின் பெயர் தலைகீழாக எழுதப்பட்டதற்கு இதுவே காரணம். இது ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையின் பிரதிபலிப்பாகும், எனவே இதனால் ஓட்டுநர் இந்த வார்த்தையை தெளிவாகவும் பார்க்க முடியும்.