இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கோவை மாவட்ட கல்லூரி மாணவர்கள் குறும்பட போட்டியில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை மற்றும் டெக்சிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பு இந்த குறும்பட போட்டியை அறிவித்துள்ளது. போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய தலைப்பில் 3 முதல் 5 நிமிடங்கள் வரையில் குறும்படத்தை எடுத்து வருகின்ற அக்டோபர் 20 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமே இதில் பங்கு பெற முடியும். இந்த குறும்பட போட்டியில் வெற்றி பெறுபவர்ள் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை பெறுவார்கள். எனவே இந்த வாய்ப்பை மாணவர்களாகிய நீங்கள் நழுவ விடாமல் உடனடியாக குறும்படத்தை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற போட்டிகள் திரைப்பட கலைத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே மாணவர்கள் இது போன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.