நெருக்கடியான நேரங்களில் நம்முடைய பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே கடன் வாங்குகிறோம். இதுபோன்ற சமயங்களில், பெரும்பாலானோர் வங்கியில் தனிநபர் கடன் வாங்குகின்றனர். ஆனால் அதற்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் தற்போது கடன் வாங்க நினைத்தால், 1 சதவீத வட்டி விகிதத்தில் பணத்தைப் பெறக்கூடிய ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. அதில் நீங்கள் அவசரகாலத்தில் பணம் எடுக்கலாம்.
நீங்கள் நிதி நிறுவனம் அல்லது வங்கியில் கடன் வாங்குவதற்குப் பதிலாக பிபிஎஃப் திட்டத்தில் கடன் வாங்கலாம். இந்தத் திட்டத்தில், தனிநபர் கடனை விட மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். உங்களுக்கு அவசர காலத்தில் கடன் தேவைப்பட்டால், தனிநபர் கடனுக்குப் பதிலாக பிபிஎஃப் திட்டத்தில் கடன் பெறலாம். PPF என்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இது அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு கணக்கைத் திறக்கும்போது, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் கடன் வாங்குவதற்கான விருப்பமும் கிடைக்கும்.
இதனாலேயே இந்த திட்டம் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது இந்த திட்டத்தில் செய்யும் முதலீட்டிற்கு 7.1 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. நீங்கள் PPF கணக்கில் கடன் வாங்க விரும்பினால் அதன் செயல்முறை மிகவும் எளிமையானதுதான். நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இருந்து கடன் வாங்கினால், அது மற்ற வகை கடன்களை விட மிகவும் மலிவானதாக இருக்கும். அதிக ஆவணங்கள் தேவையில்லை. இந்தக் கடனுக்கான வருமானச் சான்றிதழைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. PPF கணக்கிலிருந்து கடன் பெறுவது பாதுகாப்பானது. இந்தக் கடனுக்காக நீங்கள் எந்தப் பொருளையும் அடகு வைக்க வேண்டியதில்லை.
தனிநபர் கடனுடன் ஒப்பிடும்போது இந்தக் கடனின் வட்டி விகிதம் மிகவும் குறைவு. பிபிஎஃப் திட்டத்தில் கடன் வாங்கினால் 1 சதவீத வட்டி மட்டுமே செலுத்த வேண்டும். உதாரணமாக, நீங்கள் உங்கள் PPF கணக்கில் 7.1 சதவிகிதம் வட்டி பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் 8.1 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும். இதில் இதுபோன்ற நிறைய அம்சங்கள் உள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.