fbpx

அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து உங்களை பயமுறுத்துகிறதா? அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா?

நம் அனைவருக்குமே தூங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்று தான். நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களே கனவுகளாக வருவதாக கூறப்படுகிறது. எனினும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உள்ளதாக கனவு சாஸ்திரம் கூறுகிறது.

ஆனால் பொதுவாக, ஒரு நல்ல கனவு வரும் போது, ​​​​அது மங்களகரமானது என்று நம்புகிறோம்., அதன் உண்மையான அர்த்தம் புரியாமல் மகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரம் , ஒரு கெட்ட கனவு வந்தால் மோசமான சம்பவம் நடக்கப் போவதாக நினைக்கிறோம். ஆனால் நமக்கு வரும் சில கெட்ட கனவுகள் நல்ல பலன்களை என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. அப்படி நல்ல பலன்களை வழங்கும் சில கனவுகளைப் பற்றி பார்க்கலாம்.

கனவில் ஒருவரின் மரணத்தை பார்ப்பது : கனவில் ஒருவரின் மரணத்தை நாம் கண்டால், நாம் பயப்படுகிறோம், மேலும் பல்வேறு அபத்தமான மற்றும் பயங்கரமான எண்ணங்களும் நமக்கு தோன்றும்.. ஆனால் கனவில் ஒரு நபர் இறப்பதை கண்டால் அது நல்ல பலன்களைக் குறிக்கிறது. இந்த கனவு வந்தால் உங்களின் பண வரவு அதிகரிக்குமாம். நீண்ட உங்களுக்கு வராமல் இருந்த பணம் உங்களுக்கு கிடைக்குமாம். குறிப்பாக, நோய்வாய்ப்பட்ட ஒருவர் இறப்பதை கண்டால், அவர் குணமடையப் போகிறார் என்று அர்த்தம்.

வீடு எரிவது போல் கனவு வந்தால் : கனவில் எரியும் வீட்டைக் கண்டால் பயப்பட வேண்டாம். இந்த கனவு மகிழ்ச்சி வரப்போகிறது என்பதைக் குறிக்கிறது. குறிப்பாக, திருமணமாகாத ஒருவர் இந்த கனவைக் கண்டால், அவர்கள் விரும்பிய துணையுடன் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அர்த்தம். இந்த கனவை திருமணமானவர்கள் கண்டால், அவர்கள் விரைவில் குழந்தை தொடர்பான மகிழ்ச்சியைப் பெறுவார்கள் என்று அர்த்தம்.

நீங்கள் இறப்பது போல் கனவு வந்தால் : ஒருவர் தான் இறப்பது போலவோ அல்லது தற்கொலை செய்து கொள்வதையோ பார்த்தால் அது மங்களகரமானது என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. அதற்கு உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று அர்த்தம். உடல்நிலை சரியில்லாத ஒருவர் இந்த கனவைக் கண்டால், அவர் விரைவில் தனது உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவார் என்று அர்த்தம்.

நீங்கள் தகன மேடையில் இருப்பது போலவோ அல்லது கல்லறையில் இருப்பது போலவோ கனவு கண்டால், உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கப் போகிறது என்று அர்த்தம். இந்த கனவு நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும்.
இந்த கனவு கண்ட நபர் வெற்றி பெற போகிறார் என்று அர்த்தம்.

இறந்த பாம்பை பார்த்தால் : பாம்புகள் தொடர்பான பல்வேறு கனவுகளை பலரும் காண்கின்றனர். ஆனால் ஒவ்வொரு பாம்பு கனவும் மோசமானதல்ல.
உங்கள் கனவில் இறந்த பாம்பை நீங்கள் கண்டால், உங்கள் வாழ்க்கையில் கெட்ட நேரம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். இந்த கனவு உங்கள் வாழ்க்கையில் இருந்த ஆபத்து முடிந்துவிட்டது என்றும் நல்ல நேரம் தொடங்கப் போகிறது என்றும் கனவு சாஸ்திரம் கூறுகிறது.

Read More : கனவில் இதை எல்லாம் பார்த்தால் நீங்க பணக்காரர் ஆக போகிறீர்கள் என்று அர்த்தம்! அதிர்ஷ்டமும் வெற்றியும் கிடைக்கும்!

English Summary

Dream interpretation says that some of the bad dreams we have have good consequences.

Rupa

Next Post

வீட்டில் வாஸ்துபடி பணம் வச்சிருக்கீங்களா? அப்ப தான் அதிஷ்டம் கொட்டுமாம்.. உடனே செக் பண்ணுங்க!

Sat Nov 23 , 2024
Have you saved up money for building a house? Only then will the luck pour in.. Check immediately

You May Like