fbpx

ஜீன்ஸ் பேண்ட் போடும்போது நீங்கள் செய்யும் தவறு இதுதான்..!! இனியும் அப்படி பண்ணாதீங்க..!!

இன்றைய நவீன காலத்தில் அனைவரும் விரும்பி அணியும் ஒரு உடை எதுவென்றால் அது ஜீன்ஸ் தான். அலுவலகம் செல்பவராக இருந்தாலும், கல்லூரிக்கு செல்பவராக இருந்தாலும் ஜீன்ஸ் அணிந்து செல்கின்றனர். பலர் தங்கள் பீரோவில் எவ்வளவு அழகான, விலையுயர்ந்த ஆடைகள் இருந்தாலும், ஜீன்ஸ் அணிவது வித்தியாசமான நம்பிக்கையைத் தருவதாக உணர்கின்றனர். இது வேறு எந்த ஆடைகளிலும் அரிதாகவே காணப்படுகிறது. இருப்பினும், பலருக்கு ஜீன்ஸை எவ்வாறு பராமரிப்பது என்று தெரியவில்லை. அவற்றில் ஒன்றுதான் ஜீன்ஸை அயர்னிங் செய்வது.

ஜீன்ஸை அயர்ன் செய்ய வேண்டுமா இல்லையா…? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். அதற்கான பதில் இல்லை. ஜீன்ஸின் உட்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள லேபிள்களை நீங்கள் படித்திருந்தால், இந்த தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள். சொல்ல போனால், ஜீன்ஸ் தயாரிக்கப்படும் துணிக்கு அயர்ன் செய்ய தேவையே இல்லை. அதேபோல், தொடர்ந்து ஜீன்ஸ் துவைத்தால், அவற்றின் பளபளப்பை இழக்கும். அதுமட்டுமின்றி, அது அதன் வலிமையை இழந்து விரைவில் கிழிந்து விடும். நீங்கள் குறைந்தது 5 அல்லது 6 அல்லது அதற்கு மேல் அணிந்த பின்னரே துவைக்க வேண்டும். மேலும் உங்கள் ஜீன்ஸ் அழுக்காக உணர்ந்தால், துணி ஸ்ப்ரேயைப் பயன்படுத்துங்கள். ஆனால், அவற்றை தொடர்ந்து துவைக்க வேண்டாம்.

சிலருக்கு துணிகளை வெந்நீரில் துவைக்கும் பழக்கும் இருக்கும். இருப்பினும், ஜீன்ஸ் உடன் இந்த தவறை செய்யாதீர்கள். எப்போதும் ஜீன்ஸை குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரில் தான் துவைக்க வேண்டும். இதனால் அதன் நெகிழ்ச்சி அப்படியே இருக்கும். வெப்பம் ஜீன்ஸை சேதப்படுத்தும் என்பதால், அதை சூடான நீரில் துவைக்கவோ அல்லது வெயிலில் காய வைக்கவோ கூடாது. அதுபோல நீங்கள் வாஷிங் மிஷினில் ஜீன்ஸ் துவைக்கும் போது உள் பகுதியை வெளியில் வைத்து வாஷிங் மெஷினுக்குள் போட வேண்டும். இதனால் அவற்றின் நிறம் விரைவில் மங்காது. அப்படியே இருக்கும்.

Read More : ‘கூட்டமே இல்ல’..!! நாளை முதல் 2 வாரங்களுக்கு திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிப்பு..!!

Chella

Next Post

'டெய்லி 6 ரூபாய் போட்டால் போதும்.. ஒரு லட்சம் வரை கவரேஜ்..!' குழந்தைகளுக்கான இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Thu May 16 , 2024
இந்திய அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் இந்த ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் தினசரி வெறும் 6 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், ஒரு லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை பெற முடியும். வீட்டில் குழந்தை பிறந்த உடனே பலரும் அவற்றின் எதிர்காலம் குறித்து சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் அதற்காக முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். பெண் குழந்தைகளுக்கு என்றால் பொன்மகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு என்றால் […]

You May Like