fbpx

’கரண்ட் பில்’ ஆன்லைனில் செலுத்துகிறீர்களா..? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க..!! இனி ஏமாறாதீங்க..!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் போது போலி ரசீது வழங்கப்படுவதை தடுப்பதற்காக ஒரே மாடல் ரசீது வழங்கும் பணியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. மின் கட்டண மையங்கள், இ-சேவை மையங்கள் மற்றும் சில வங்கிகளில் மின்கட்டணம் தற்போது நேரடியாக செலுத்தப்படுகிறது. அதேசமயம், பாரத் பில் பே, ஃபோன் பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்டவை மூலமும் மின் கட்டணத்தை செலுத்தும் வசதி உள்ளது. மின்கட்டணம் மையங்களில் வழங்கப்படும் ரசீது வண்ணங்களில் இருப்பது மட்டுமல்லாமல் மின்வாரியத்தின் வங்கிக் கணக்கு ஏன் உள்ளிட்ட பல விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

’கரண்ட் பில்’ ஆன்லைனில் செலுத்துகிறீர்களா..? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க..!! இனி ஏமாறாதீங்க..!!

ஆனால், இணையத்தில் வழங்கப்படும் ரசீது வெள்ளை தாளில் விண்ணப்பதாரர் பெயர் மற்றும் கட்டணம் உள்ளிட்ட சில விவரங்கள் மற்றும் கணினியில் டைப் செய்தது போல இருக்கும். இதனால் தனியார் பிரவுசிங் சென்டரில் கட்டணம் செலுத்தவும் விண்ணப்பிக்கவும் செல்லும்போது அவற்றின் உரிமையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தி விடுவதாகவும் மின்வாரிய கணக்கிற்கு வருவதில்லை எனவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த முறைகேட்டை தடுப்பதற்காக தற்போது மையங்களில் கட்டணம் செலுத்தும் போது வழங்கும் ரசீது போலவே இணையதளத்திலும் செலுத்தும் கட்டணங்களுக்கு ஒரே மாடல் ரசீது வழங்கப்படுகிறது.

Chella

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிவிப்பு..!!

Tue Jan 24 , 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் கூடிய விரைவில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. கூடிய விரைவில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம். ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்த சேவை, அதனால் பயன்பெற்ற அனைத்து மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். இதனால், இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார். […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like