fbpx

ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறீர்களா?… புற்றுநோய் ஏற்படும் அபாயம்!…

ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில், ‘ப்ரிஜ், மைக்ரோவேவ் ஓவன்’ போன்ற நவீன மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகி விட்டன. விளைவு, தேவையானபோது சமைத்து சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவை சமைத்து சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவை சமைத்து, ‘ப்ரிஜ்’ஜில் வைத்துக் கொள்கிறோம். விரும்பும்போது, அதை மீண்டும், ‘மைக்ரோவேவ் ஓவனி’லோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்தி சாப்பிடுவது, வழக்கமாகி விட்டது. எப்போதும் சூடாக சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படி சாப்பிட்டால் ஆரோக்கியம் என்ற தவறான எண்ணமும் தான், இதற்கு காரணம்.

பழமையான உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் புரதச்சத்து மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது விஷமாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோல உருளைக்கிழங்கு சேர்த்த பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டும் சூடாக்குவதன் மூலம் அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுவதோடு இது செரிமான அமைப்பையும் மாற்றுகிறது.

பீட்ரூட்டை உணவை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதைச் செய்வதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நைட்ரேட் அழிக்கப்படுகிறது. சமைத்து மீந்து போன சிக்கனை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இது உங்களுக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒரு போதும் கீரையை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது. ஏனெனில் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து அதன் மூலம் உயிரை பறிக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்க செய்கிறது.

Kokila

Next Post

28-ம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்த விலக்கு...! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு...! இவர்களுக்கு மட்டும் தான்...!

Sun Apr 23 , 2023
சேலம்‌ மாவட்டம்‌, ஏற்காடு மலைப்பாதையில்‌ சாலை சீரமைப்புப்‌ பணிகள்‌ 24.04.2023 முதல்‌ 28.04.2023 வரை நடைபெறவுள்ளதால்‌ மாற்றுச்சாலையான குப்பனூர்‌ சாலையை இலகு ரக மற்றும்‌ கன ரக வாகனங்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டம்‌, ஏற்காடு மலைப்பாதையில்‌ 2 மற்றும்‌ 3-வது கொண்டை ஊசி வளைவிற்க்கு இடையே நெடுஞ்சாலைத்துறையின்‌ மூலம்‌ சாலை சீரமைப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளதால்‌ பாதுகாப்பு நலன்‌ கருதி […]
சுங்கச்சாவடி மாதாந்திர பயண அட்டைக்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா..? - மத்திய அமைச்சர் பதில்

You May Like