வெளிநாட்டினரை தடுப்பு மையங்களில் வைத்திருக்கும் வழக்கில், முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா..? என்று உச்ச நீதிமன்றம் அசாம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
வெளிநாட்டினரை நாடு கடத்துவதற்குப் பதிலாக தடுப்பு மையங்களில் வைத்திருப்பதாகக் கூறப்படும் வழக்கில் அசாம் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்களை நாடு கடத்த முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 63 பேரை நாடு கடத்தும் நடவடிக்கையை 2 வாரங்களுக்குள் தொடங்கி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
ஒருவர் வெளிநாட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டதும், அவரை நாடு கடத்தி விடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டினரின் முகவரி தெரியவில்லை எனக் கூறி அவர்களை நாடு கடத்த மறுத்துவிட்டீர்கள். அது ஏன் எங்கள் கவலையாக இருக்க வேண்டும்..? நீங்கள் அவர்களை வெளிநாட்டுக்கு கடத்துங்கள். நீங்கள் முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.