fbpx

தலையணையை இப்படி விதவிதமாக வைத்து தூங்குகிறீர்களா?… எல்லா பிரச்சனைகளும் இதில்தான் உருவாகிறது!

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கு இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித, விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள். இப்படியான தலையணையே இல்லாமல் தூங்குவதில் நமக்கு எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டு வடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்குமாம். இதனால் உடல்வலி, தண்டுவட பிரச்னை துளி கூட ஏற்படாதாம். உயரமான தலையணை பயன்படுத்தும் போது படுக்கை நிலைகுலைந்து போகும். இதனால், தண்டுவடம் பாதிக்கும். தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை கழுத்து வலியும் கூட வராது. தலையணை இல்லாமல் தூங்கும்போது, உடலின் எலும்புகளை சீராக்க முடியும். தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு முகச்சுருக்கம் ஏற்படாது.

தலையணை இல்லாமல் தூங்கும்போது, சிலர் நேராக படுத்து தூங்குவார்கள். அவர்களுக்கு மெல்லிய தலையணையே சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்பட்டை பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். சிலர் ஒருக்களித்து அதாவது ஒருபக்கமாக படுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு அடர்த்தியான தலையணை வைத்து படுத்தால் தோள்பட்டை, காலுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துமாம்.

குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கு தட்டையான தலையணையே நல்லது. இது நம் தலையின் நிலையை அசெளரியமாக உணராமல் இருக்க உதவி செய்வதோடு, முதுகு, இடுப்பு வலியையும் விரட்டியடிக்கிறது. ஆனால், தலையணை இல்லாது தூங்கினால் நாம் நோய்களை விரட்டிவிட முடியும். சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள். அவர்கள் மட்டும் தலையணை வைத்து தூங்கலாம்.

Kokila

Next Post

தமிழகத்தில் இந்த மரத்தை வெட்டினால் கைது..! அமைச்சர் தகவல்…

Sat Aug 26 , 2023
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடற்கரையோரங்களில், தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளன. இந்த பணிக்கான பனை விதைகள் சேகரிக்கும் முகாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தமிழகம் முழுவதும் 500 இடங்களில் பனை விதைகள் சேகரிப்பு பணியை […]

You May Like